1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…

1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…

வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் வேற்று கிரகவாசிகள் குறித்து சினிமா படங்களும் வெளியாகி பரபரப்பாக ஓடுகின்றன.

தி இண்டி பென்டன்ஸ் டே என்ற ஆங்கில படத்தில் பூமியை தாக்கும் வேற்று கிரகவாசிகளை அழிப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அது போன்ற சம்பவம் இன்னும் 1500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறலாம். வேற்று கிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வரலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானி இவான் சாலமனைட்ஸ் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டார். அதில் இதுவரை விண்வெளியில் இருந்து வேற்று கிரகவாசியின் குரலை கேட்பதில்லை. அதற்காக அங்கு யாரும் இல்லை என கூற முடியாது. அக்குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

1500 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்துள்ளார். தற்போது டி.வி. மற்றும் ரேடியோ ஒளிபரப்பு சிக்னல்கள் விண்வெளிக்கு சென்று 80 ஆண்டு ஒளிவேகத்தில் மீண்டும் பூமிக்கு திரும்புகின்றன. அதன் வழியாக கூட அவர்கள் சிக்னல்களை அனுப்பலாம். அதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அந்த சிக்னல்களை கண்டு பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News