Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

12 தொழிற்சங்கங்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு

February 26, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

Silhouette group of people Raised Fist and Protest Signs in yellow evening sky background

நியாயமற்ற முறையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மின்சார சேவையாளர்கள் பாதிக்கப்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  திங்கட்கிழமை (27)  12 தொழிற்சங்கங்கள் இணைந்து லங்விம பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பில் மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நியாயமான விலையில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குதல் மற்றும் முறையான சேவைகளை வழங்குதல் தொடர்பில் 6000 கையெழுத்துக்களுடன் மின்சாரசபை தலைவரிடம் யோசனையொன்று கையளிக்கப்பட்டது.

இதில் சேவையாளர்கள் தொடர்பான பிரச்சினை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இதுவரையில் அது தொடர்பில் எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை.

இதன் காரணமாக மின்சாரசபையைச் சேர்ந்த சுமார் 25 000 சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அடிப்படை காரணங்கள் எவையும் இன்றி உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக பெரும்பாலான சேவையாளர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் வருடாந்த கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை.

இவ்வாறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அடிப்படையின்றி அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணங்களை உடனடியாக நியாயமான கட்டணங்களாகக் குறைத்தல் , மின்சார சேவையாளர்கள் மற்றும் பாவனையாளர்களை பாதுகாக்கும் வகையில் செயற்படல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய திங்கட்கிழமை 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6000இற்கும் அதிக தொழிற்சங்க உறுப்பினர்கள் விடுமுறையை அறிவித்து முற்பகல் 10.30 மணியளவில் லங்விம பிரதான அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பினை வெளியிடவுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது ; பொதுஜன பெரமுன

Next Post

மனோவை எச்சரித்த இசைஞானி

Next Post
மனோவை எச்சரித்த இசைஞானி

மனோவை எச்சரித்த இசைஞானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures