மக்களின் வயிற்றில் அடித்த ராஜபக்ஸாக்களுக்கு மீண்டும் அதிகாரத்துக்கு வர இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (06) கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஸாக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு முடியவில்லையெனவும், ஏன் அவ்வாறு செய்ய முடியவில்லையென்பதையும் பொதுஜன பெரமுமுன கட்சி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.












