‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என இரண்டு தொடர் வெற்றி படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டீசல் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆருயிரே’ எனும் பாடலும், பாடலுக்கான டிரிகல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும் , நடிகருமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீசல்’ எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக் , காளி வெங்கட், விவேக் பிரசன்னா, மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். எஸ். பிரபு மற்றும் ரிச்சர்ட் எம். நாதன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆருயிரே என் ஆருயிரே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பின்னணி பாடகர் ஜி. ரவி பாடியிருக்கிறார். காதலர்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவு உணர்வை உணர்த்தும் இந்தப் பாடலின் மெல்லிசை… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.