இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி, ஏற்கனவே தெலுங்கு திரையுலகில், தன் வெற்றிக் கொடியை பறக்க விட்ட நிலையில், தற்போது கோலிவுட்டுக்கு அடி எடுத்து வைத்துள்ளார். தெலுங்கில், அகில் ஜோடியாக, கல்யாணி நடித்த, ஹலோ படம், பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது, தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், வான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, தெலுங்கில் இரண்டு, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ‘அறிமுகமானதுமே, மூன்று மொழிகளில் ஒரு நடிகை, ‘பிசி’யாக இருப்பது, சாதாரண விஷயமில்லை’ என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.
கல்யாணி, மலையாளத்தை தாய் மொழியாக உடையவராக இருந்தாலும், பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இதனால், தமிழில், சரளமாக வெளுத்து கட்டுகிறார்.