ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு தனது மனைவியையும் மகளையும் காட்டிக்கொடுத்துள்ளமை கவலைக்குறிய விடயம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
அலோசியசிடம் இருந்து ரவி கருணாநாயக்க லஞ்சம் பெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீது பழியை போட்டு அவர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
உண்மையில் இது மிகவும் மோசமான செயற்பாடு என அவர் கலந்துகொண்ட தனியார் தொலைகாட்சி அரசியல் விவாதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.













