மாத்தறையில் மொரவக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவிட்டியன பிரதேசத்தில் உள்ள வீ்டொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுபோவிட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மொரவக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

