Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம் இணையதளத்தில் டாப் டிரெண்ட்

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

இந்தியா முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தவிர்க்க முடியாத செய்தியாக மாறிவிட்டது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம் நோக்கிச் சென்ற அந்தப்பேரணி இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்டது. அநேகமாக சுதந்திரத்திற்குப் பின் சுமார் 30ஆயிரம் விவசாயிகள் இடைவிடாது 6 நாள் நடத்திய பேரணி இதுவாகத்தான் இருக்கும். விவசாயிகள் தற்கொலைக்கு பெயர்போன மாநிலம் மகாராஷ்டிரா என்பதை நாடே அறிந்ததுதான்.

200 கிலோமீட்டர் பயணித்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தலைநகர் மும்பைக்குள் ஞாயிறன்று நுழைந்தனர். அவர்களுக்கு மும்பை நகர மக்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர்.மும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆனந்த் நகரிலிருந்து ஞாயிறன்று ஆறாவது நாள் பயணத்தை விவசாயிகள் துவங்கியபோது பலரது காலணிகள் ஏற்கனவே அறுந்துவிட்ட நிலையில் வெறும் காலில் நடந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் காலில் வெடிப்புகள் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் தளராத உறுதியோடு நெடும்பயணத்தில் முழக்கமிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 76 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. மோடி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயிகள் மேலும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நடத்திய 11 நாள் பல்வேறு விவசாய அமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்தின. அப்போது மாநில பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்துடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி நெடும்பயணம் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் விவசாயிகளின் போராட்டம் இணையதளத்தில் #KisanLongMarch ஹாஸ் டேக் மூலம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இணையத்தில் டாப் டிரெண்ட் ஆக ‘விவசாயிகள் ஊர்வலம்’ மாறியுள்ளது.

ஒரே நாளில் 60 ஆயிரம் டுவீட்டுகள். அடுத்த 28 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டுவீட்டுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நேபாளத்தில் வங்கதேச பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் காயம்

Next Post

மாணிக்சர்க்கார் பெயரில் விருது: சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் அறிவிப்பு

Next Post

மாணிக்சர்க்கார் பெயரில் விருது: சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures