Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானநிலையத்தில் ஏற்பட்ட அவமானத்தை தொடர்ந்து கோட்டபாய கடல்வழியாக வெளியேற திட்டம்  |  ஏஎவ்பி

July 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை விமானநிலையத்திலகுடிவரவு துறை அதிகாரிகளுடன்  ஏற்பட்ட அவமானத்திற்கு பின்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கடற்படையின் ரோந்து படகினை பயன்படுத்துவது குறித்து ஆராய்கின்றார்  என அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக ராஜபக்சாக்கள்  அவசரமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியதால் பசில் ராஜபக்ச அங்கு தனது கடவுச்சீட்டை வைத்துவிட்டு வெளியேறிவிட்டார்இதன் காரணமாக அவர் புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெறவேண்டிய நிலையேற்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன

ஒரு சூட்கேஸ் முழுவதும் ஆவணங்கள் மற்றும் 17.85 மில்லியன் ரூபாய்  ஆகியவற்றையும் அந்த பங்களாவில்  விட்டுச்சென்றுள்ளனர் என அதிகாரபூர்வ தரப்புகள் தெரிவித்தன. குறிப்பிட்ட பணம் தற்போது பொலிஸாரிடம் உள்ளது.

ஜனாதிபதி எங்கிருக்கின்றார் என்பது குறித்து ஜனாதிபதி அலுவகம் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லைஇஎனினும் அவர் தொடர்ந்தும் முப்படைகளின் தளபதியாக உள்ளார்இ அவர் பயன்படுத்துவதற்கான இராணுவவளங்கள் உள்ளன.

கடற்படை கலம் ஒன்றில் ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் வெளிநாட்டிற்கு கொண்டு செல்வது ஜனாதிபதியின் நெருங்கிய படை சகாக்கள் ஆராய்ந்துவருகின்றனர் என உயர் பாதுகாப்பு தரப்பொன்று தெரிவித்தது.

கடல்வழியாக வெளியேறுவதே தற்போது சிறந்த தெரிவாக உள்ளது என தெரிவித்த பாதுகாப்பு அதிகாரி  ஜனாதிபதி மாலைதீவிற்கு அல்லது இந்தியாவிற்கு செல்லலாம் அல்லது விமானம் மூலம் துபாய் செல்லலாம் என குறிப்பிட்டார்.

2013 இல் திறக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் பெயர் சூட்டப்பட்ட நாட்டின் இரண்டாவது விமானநிலையமான மத்தல விமான நிலையத்திலிருந்து விமானமொன்றை அவர் வாடகைக்கு அமர்த்தி புறப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விமானநிலையம் அது பயனற்ற பெருஞ்செலவு என கருதப்படுகின்றது அங்கு சர்வதேச விமானங்கள் வருவதில்லைஇஉலகில் மிகவும் குறைந்தளவு பயன்படுத்தப்படும் விமானநிலையங்களில் ஒன்றாக அது காணப்படுகின்றது.

Previous Post

கொட்டாவ பகுதியில் எரிவாயு வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு

Next Post

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்

Next Post
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures