தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (12.01.2026) காலை ஆரம்பித்த தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுவலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சத்தியாக்கிரக போராட்டம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12.01.2026) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
