தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீண்டும் தலை தூக்கவே முடியாது என நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், தகுந்த நேரத்தில் அவர் வெளிப்படுவார் என பழ.நெடுமாறன் கூறியது பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது.
இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் எம்.பி., நவீன் திஸாநாயக்க கூறுகையில்,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு தெரிவித்தார் என்று எனக்கு தெரியாது.
என்றாலும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை எங்கள் இராணுவம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால், இது தொடர்பாக நாங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
இருப்பினும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் மீண்டும் பிரபாகரன் தலை தூக்கப்போவதில்லை என கூறினார்.