1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. திருமணத்திற்கு பிறகும் கேரக்டர்கள், குத்துப்பாட்டுகளில் நடனமாடி வரும் கஸ்தூரி டுவிட்டரில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதோடு சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் வெளியான டிராபிக் ராமசாமி, தமிழ்ப்படம்-2 ஆகிய படங்களில் நடித்த கஸ்தூரி, தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தில் டாக்டராக நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், இந்த படத்தில் டாக்டராக நடிக்கிறேன். நாயகன் விஜய் ஆண்டனிக்கு மெடிக்கல் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வேடம் என்பதால் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்கிறார் கஸ்தூரி.
முதன்முறையாக விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் டைரக்டர் மோகன்ராஜாவின் மகன் அறிமுகமாகிறார்.

