புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் அடங்கும் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார். இந்த பயணம் நான்கு நாட்களை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்னும் 4 நாட்களினால் தள்ளிப்போடப்படும் சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

