தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விக்ரம் பிரபு – புதுமுக நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘சிறை ‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ மின்னு வட்டம் பூச்சி’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிறை’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, எல் .கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மின்னு வட்டம் பூச்சி என்ன மயக்குற ..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் பாடகி பத்மஜா ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா – ஜஸ்டின் பிரபாகரன் – கார்த்திக் நேத்தா- கூட்டணியில் மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் மண்ணின் மணத்தை இயல்பாக பிரதிபலிப்பதால்… அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
