Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் – ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

January 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

விகாரைகளுக்குச் சொந்தமானவை

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை | Ranil Warns Nnp Against Interfering Viharas Assets

அதற்கமைய விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்குச் சொந்தமானவை தேவாலயங்களுக்கும் உரியனவாகும்.

நாம் வழங்கும் தங்க நகைகள் அனைத்தும் விகாரைகளுக்கோ அல்லது தேவாலயங்களுக்கோ சொந்தமானவை.

அவற்றில் கைவைக்கச் சென்று நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.

பௌத்த மத பாதுகாப்பு

1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார்.

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை | Ranil Warns Nnp Against Interfering Viharas Assets

இதை ஏற்றுக்கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து இதனைப் பாதுகாப்பது அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   

Previous Post

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் சமுத்திரக்கனியின் ‘தடயம்’

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures