Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சி

April 8, 2019
in News, Politics, World
0

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹாலிவுட்டில் இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது .

வான்வெளி குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு பிளாக் ஹோல் என்பது அதிசயம் என்றால் மிகையில்லை. பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இது, பூமியின் ஈர்க்கும் சக்தியை விட பல சில கோடி மடங்கு ஈர்ப்பு விசை கொண்டது .

சிறிய ப்ளாக் ஹோல் பெரும் சூரியனை உள்ளிழுத்து கொள்ளும் என்பார்கள் பூமியிலிருந்து விண்கலங்கள் விண்ணை நோக்கி புவியின் ஈர்ப்பு விசையை மீறி செல்ல வேண்டும் என்றால் வினாடிக்கு 11.2 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும். அதற்கு குறைவான வேகம் இருந்தால் பூமி மீண்டும் அதனை இழுத்து கொள்ளும்.

ஆனால் கருந்துளை என்ற பிளாக் ஹோலில் உள்ளே நுழையும் ஓளி, தனது 3 லட்சம் கிமீ வினாடிக்கு என்ற வேகத்தை வைத்து கூட தப்பி வெளியே வர இயலாத அளவிற்கு அபரிமிதமான ஈர்ப்பு விசையை உடையது என்கிறார்கள் . காலத்தையும் ஈர்த்து நிறுத்த கூடியது.

அதாவது அதில் நுழைபவர்கள் இறந்துவிட மாட்டார்கள் அதில் நுழையும் அனைத்தும் அழிவதில்லை மாறாக சக்திவாய்ந்ததாக உருமாறி வேறு பரிமாணம் பெற்று விடுவதாக சொல்லப்படுகிறது.

இவை அனைத்தையும் மறுத்து மாற்று கருத்துகளும் உள்ளது. இது வரை கருந்துளையின் இயற்கையான புகைப்படம் வெளியானதில்லை வெறும் வரைபட வடிவமாகவே வெளி வந்து கொண்டிருக்கிறது.

இந்த பிளாக் ஹோலை ஆய்வு செய்ய 2017ல் சர்வதேச அளவில் ஈவென்ட் ஹாரிசன் தொலை நோக்கி திட்டம், ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, சிலி உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது .

பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்கள் இந்த ஆய்வு திட்டத்தில் இணைக்கப்பட்டது. இதன் முதல் ஆய்வுக்காக ‘சாகிட்டாரியஸ் ஏ தனுஸ்’ என்ற நட்சத்திரம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் உள்ள கருந்துளை பூமியிலிருந்து சுமார் 27 ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் உள்ளது. 4 மில்லியன் சூரிய எடை கொண்ட கருப்பு துளையாகும்.

மற்றொரு நட்சத்திரம் ‘எம் 87’. இதில் காணப்படும் கருந்துளை பூமியிலிருந்து 50 முதல் 60 மில்லியன் ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது மிகபெரிய கருந்துளையாகும்.

இந்த ஆய்வு தொடங்கப்பட்டு கருந்துளையின் முதல் நேரடி புகைப்படம் மற்றும் தகவல்கள் பெறும் நோக்கத்தில் தொலைநோக்கியிடம் இருந்து வந்த தகவல்கள் பூமிக்கு தரப்பட்டு ஆய்வகங்களில் சேமிக்கப்பட்டு வந்தது .

இதுகுறித்து நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கபட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் வரும் 10ம் தேதி புதன்கிழமை சர்வதேச அளவில் ஆறு இடங்களில் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.

இதில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கருந்துளையின் முதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் கருந்துளை குறித்த பல புதிர்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டம்

Next Post

கிளிநொச்சியில் காணி கேட்டு போராடியவர் மரணம்

Next Post

கிளிநொச்சியில் காணி கேட்டு போராடியவர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures