கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
87 வயதுடைய வயோதிப தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயோதிப தாயின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ள நிலையில் ஒரு பிள்ளை வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, வயோதிப தாயின் மருமகள் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் சிலர் வயோதிப தாயை கொலைசெய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

