Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு – கிழக்கு தமிழர்கள் தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன..! ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி

February 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (16.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவிததுள்ளார்.

தமிழர் பிரதேசம்

மேலும் தெரிவிக்கையில், இணைந்த வடக்கு – கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜே.வி.பி. எவ்வாறான கருத்தை கொண்டுள்ளது என பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

வடக்கு - கிழக்கு தமிழர்கள் தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன..! ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி | Looking Forward Jvp Regarding North East Tamils

எனினும். இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே முக்கிய காரணமாக செயற்பட்டது.

அரசியல் தீர்வு

ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜே.வி.பி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

வடக்கு - கிழக்கு தமிழர்கள் தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன..! ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி | Looking Forward Jvp Regarding North East Tamils

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜே.வி.பி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூட தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஸ்ரீரங்கேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Previous Post

சர்வதேச யோகாசன சுற்றுப்போட்டி 2024

Next Post

90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா 

Next Post
கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம் – யாழ். அரச அதிபர்

90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures