பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, வடக்கு மாகாணத்தின் சில திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேச சபைச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vethanayagan) குறித்த உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எதிராக விசாரணை
அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று பிரதேசசபைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்கள் வேறு திணைக்களங்களுக்கு உடன்நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை குறித்த அதிகாரிகளில் சிலருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.