Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வசந்த கரன்னகொடவை கைது செய்வதற்கு இடைக்கால தடை

March 7, 2019
in News, Politics, World
0

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தன்னை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக வசந்த கரன்னகொடவினால் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவரை கைது செய்யும் நடவடிக்கையை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி காலை வாக்குமூலம் ஒன்றினை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம் ஒன்றைப் பெற்று கொள்வதற்காக பொலிஸார் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அவரது வீட்டிற்குச் சென்றிந்தனர்.

எனினும் குறித்த பொல்ஹென்கொட முகவரியில் அவரது சகோதரர் வசித்து வரும் நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வேறொரு முகவரியினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வழங்கிய பத்தேகனவில் உள்ள கரன்னகொடவின் வீட்டுக்கு கிருலப்பனைப் பொலிஸார் சென்றபோதும் அவர் அந்த முகவரியில், இல்லையென கிருலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் இவர் நாட்டை விட்டுத் தப்பிச்செல்லக் கூடும் என்பதால், கடவுச்சீட்டை முடக்கவும், அவரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மன்னார் மனித எச்சங்கள் பழங்காலத்துக்குரியது

Next Post

பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த சாதனை பெண்!

Next Post

பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த சாதனை பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures