வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ஜெயில். கஞ்சா விற்கும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதையில் இந்த படம் உருவாகிறது. நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரபலமான அபர்ணதி நாயகியாக நடிக்கிறார்.
படத்தில் ஜி.வி.பிரகாஷ் – அபர்ணதி இடம்பெறும் ஒரு காட்சியில் லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளதாம். இதுபற்றி அபர்ணதியிடம் இயக்குனர் சொன்னபோது, எந்தவித தயக்கமும் இன்றி மிக இயல்பாக நடித்துக் கொடுத்தாராம். முதல் படத்திலேயே சிறிதும் பதட்டமில்லாமல் அவர் லிப்லாக் காட்சியில் நடித்ததை ஜெயில் படக்குழுவில் ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.