Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

வங்காளதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

June 4, 2018
in Sports
0

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது.

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். கனி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷசாத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நஜிபுல்லா சத்ரான் 2 ரன்னிலும், மொகமது நபி டக் அவுட்டும் ஆகினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

அதன்பின் ஸ்டானிக்சாய் உடன் சமியுல்லா ஷென்வாரி ஜோடி சேர்ந்தார். ஷென்வாரி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபிகுல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டானிக்சாய் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் அபுல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். தமிம் முஜீப் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 20 ரன்னிலும், மஹ்மதுல்லா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷபூர் சத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடக்கிறது.

Previous Post

ஓய்வை அறிவித்த அப்ரிடி! இது 6 வது முறை

Next Post

ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது உலக கால்பந்து போட்டிக்கு இன்னும் 10 நாட்களே

Next Post

ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது உலக கால்பந்து போட்டிக்கு இன்னும் 10 நாட்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures