லா லிகா என அழைக்கப்படும் ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.புதனன்று 5 லீக் போட்டிகள் நடைபெற்றன.முதல் ஆட்டத்தில் மலகா அணியும் செவில்லா அணியும் மோதின.ஆட்டம் தொடங்கிய 15 நிமிடத்தில் செவில்லா வீரர் கோர்ரே கோல் அடித்து அசத்தினார்.இந்த கோல் தான் ஆட்டத்தின் முதல் மற்றும் கடைசி கோலாக அமைந்தது.இறுதியில் செவில்லா 1-0 அணி என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது லீக் ஆட்டத்தில் கெட்பே அணி லா கொருனா அணியை எதிர்கொண்டது.துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கெட்பே அணி 3-0 என்ற கோல் கணக்கில் லா கொருனா அணியை எளிதாக வென்றது.
மூன்றாவது லீக்கில் அத்லெடிக் பில்பாவோ அணியும் வாலன்சியா அணியும் மோதின.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்து 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.நான்காவது லீக் ஆட்டத்தில் பலமான வில்லர்ரியல் அணியை எய்பெர் அணி எதிர்கொண்டது.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் எய்பெர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இறுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணியும்,லெகானஸ் அணியும் மோதின.அட்லெடிகோ மாட்ரிட் அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி கிடைத்த கேப்களில் கோலடிக்க முயற்சி செய்தனர்.
அட்லெடிகோ மாட்ரிட் வீரர்களின் அபார ஆட்டத்தால் லெகானஸ் வீரர்கள் பந்தை உதைக்க முடியாமல் துவக்கம் முதலே திணறினர்.இறுதியில் அட்லெடிகோ மாட்ரிட் 4-0 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 4 கோல்களும் அட்லெடிகோ மாட்ரிட் நட்சத்திர வீரர் கிரீஸ்மேனால் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.