ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான பிரித்தானிய இராஜதந்திரியை சந்தித்து தனது லண்டன் பயணம் சுமூகமாக இடம்பெறும் வகையில் சில உத்தரவாதங்களை பெற்ற பின்னரே தனது பிரித்தானியப் பயணத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்தார்.
எனினும் இன்று பிற்பகலில் லண்டன் அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் தான் நடத்தவுள்ள சந்திப்புக்கு எதிராக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஒரு திடீர் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் என லண்டனில் உள்ள ஜேவிபி கிளையும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ரணில் அரசதலைவராக இருக்கும்போது அவர் மேற்கொண்ட தனிப்பட்ட பிரித்தானிய பயணத்துக்கு அரச நிதி செலவழிக்கபட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது லண்டனில் நிற்கும் சிறிலங்கா சீஐடியினருக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் குறித்த விடயம் காதில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த பரபரப்பான விடயங்களை தழுவி வருகிறது இன்றைய செய்திவீச்சு,
