Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் ஒருவர் கைது | தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை கோரும் மெட்ரோபொலிட்டன் பொலிஸார்

June 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைதுசெய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோபொலிட்டன்பொலிஸார்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த இரண்டாவது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகின்றது.

இந்த குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தரபாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிஸ் தளபதி டொமினிக் மேர்பி இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்த பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பாரதூரமான சம்பவங்களை போல இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேலும் முன்னெடுப்பதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இந்த சம்பவம் குறித்து தகவல்கள் உள்ளவர்கள் உள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் அவர்கள் இன்னமும் விபரங்களை தெரிவிக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விபரங்கள் உள்ளவர்களை பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம் நீங்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

[email protected].

இந்த விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித்தகவல்கள் உள்ளவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் குறிப்பாக 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள டொமினிக் மேர்பி இலங்கையில் அந்த நாட்களில் உறவினர்கள் வசித்தவர்கள் – பின்னர் அந்த உறவினர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும்  தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2001 சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின்படி 2023ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி லண்டனின் தென்பகுதியில் வசித்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என  தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பிணையின் கீழ் உள்ளார் 

இது 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பானது இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்எனவும் தெரிவித்துள்ளனர்.

2022 இல் பெப்ரவரியில் இதே குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.இது 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடையது.எனவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார் விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன 2017 இல் பயங்கரவாத பொலிஸின் யுத்த குற்ற பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவையே இந்த குற்றங்கள்.எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

Next Post

ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ பட பிரத்யேக காணொளி வெளியீடு

Next Post
ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ பட பிரத்யேக காணொளி வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை' பட பிரத்யேக காணொளி வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures