‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் :தி ராஜா சாப் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹாரர் ஃபேண்டஸியால் உருவான இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், பொமன் இரானி, சஞ்சய் தத், ஜரினா வஹாப் , மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்திகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் வித் ஃபேண்டஸி ஹாரர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் வி எஃப் எக்ஸ் தொழில்நுட்ப தரத்தால்… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.