சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து திரைக்கு வந்துள்ள படம் பரத் அனே நேனு. சிறிய இடை வேளைக்குப்பிறகு மகேஷ்பாபுவிற்கு மெகா ஹிட்டாக அமைந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் தனது மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் போட்டோவையும் வெளியிட்டார் மகேஷ்பாபு.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்து வரும் இப்படம் வெளிநாடுகளில் இதுவரை 3 மில்லியன் வசூலித்துள்ளதாம். ஆக, இப்படத்தின் மொத்த வசூல் தற்போதைய நிலவரப்படி ரூ.100 கோடியை நெருங்கி விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.