சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், ராஜமவுலி இயக்கத்தில் நடித்த மாவீரன் படத்திற்கு பிறகு தெலுங்கு முன்னணி நடிகராகி விட்டார். தற்போது மீண்டும் ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்து வருகிறார்.
அதோடு, ராம்சரண் தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்மரெட்டி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன். இந்நிலையில், நேற்று ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் அவர் ஒரு வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், உங்களுக்கு எத்தனை வயது என்பது எனக்கு தெரியாது. ஆனால் எப்போதும் 18 வயது பையன் போலவே காட்சியளிக்கிறீர்கள். உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் இதேபோல இளமையாக இருங்கள் என்று வாழ்த்து கூறியுள்ளார் அமிதாப்பச்சன்.

