Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காஞ்சனா 3 டிரைலர் – விமர்சனம்

March 28, 2019
in Cinema
0

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்க, ஓவியா, வேதிகா நாயகிகளாக நடிக்க, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி, ஸ்ரீமன், நிக்கி டம்போலி, கபிர் துகான் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தின் டிரைலர் இன்று(மார்ச் 28) யு-டியூபில் வெளியிடப்பட்டது.

இதற்கு முன் ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் 2007ல் வெளிவந்த ‘முனி’, 2011ல் வெளிவந்த ‘முனி 2 – காஞ்சனா’, 2015ல் வெளிவந்த ‘முனி 3 – காஞ்சனா 2’ வரிசையில் ‘முனி 4 – காஞ்சனா 3’ படம் இது.

முந்தைய படங்களைப் போலவே இதுவும் ஒரு பேய்ப் படம்தான் என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். வழக்கம் போல ஒரு பேய்ப் படத்தை பார்த்துப் பயப்படும் விதத்திலும், நகைச்சுவைப் படமாகவும் கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.

‘எனக்கு ஒண்ணுன்னா கூட விட்டுட்டு போயிடுவேன், ஆனா, என் பசங்களுக்கு ஒண்ணுன்னா வெட்டிட்டுதான்டா போவேன்,’ ‘நெருப்பைக் கூட தொடலான்டா, கற்பைத் தொடக் கூடாது’, ‘நீ மாஸ்னா நான் டபுள் மாஸ்’ என ராகவா லாரன்சின் ‘பன்ச்’ டயலாக் படத்தில் இருக்கிறது. ‘மாஸ், பக்கா மாஸ், டபுள் மாஸ்’ என மாஸ் டயலாக்குகளை ராகவா லாரன்ஸ் விடமாட்டார் போலும்.

படம் முழுவதுமே அந்த வயதான தோற்றத்தில்தான் ராகவா லாரன்ஸ் இருப்பாரா அல்லது பிளாஷ் பேக்கில் ஒரு இளமையான தோற்றத்தில் வருவாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

2015ல் ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் கெட்டப் தான் இந்த ‘காஞ்சனா 3’ படத்தின் வயதான கெட்டப். அதன்பின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற பெயரில் தெலுங்குப் படமான ‘பட்டாஸ்’ படத்தை இயக்கி நடித்து 2017ல் வெளியிட்டார்.

அந்த கெட்டப் ராகவாவுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும். அதை இத்தனை வருடங்கள் கழித்து ‘காஞ்சனா 3’ படத்திற்காக மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். வயதான தோற்றத்தில் உள்ளவருக்குள் இளமையான பேய் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்யும் கதையாக இந்தப் படத்தின் கதை இருந்தாலும் இருக்கும்.

படத்தின் இரண்டு கதாநாயகிகளான ஓவியா, வேதிகா பயப்படும் காட்சிகள் சில வினாடிகள் டிரைலரில் வந்து போகின்றன. அது போலவே, கோவை சரளா, ஸ்ரீமன் சில வினாடிகள் வருகிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் மிகச் சுமாராக உள்ளன.

இசையமைப்பாளர் என தனிநபர் இல்லாமல் ஒரு இசை இணையதளம் இசையை வழங்குவது ஆச்சரியம்தான்.

டிரைலர் என்றால் 2 நிமிடங்களாவது இருக்கும். இந்த டிரைலர் டீசர் அளவில் 1 நிமிடம் 16 வினாடிகள்தான் இருக்கிறது.

வெளியான சில மணி நேரங்களுக்குள் 10 லட்சம் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. ஆனால், யு டியூபில் டிரைலரின் ஆடியோ தரம் மிக மோசமாக உள்ளது.

Previous Post

12 வயது குறைந்த நடிகரை மறுமணம் செய்யும் நடிகை.?

Next Post

ராம் சரணுக்கு வாழ்த்து சொன்ன அமிதாப்

Next Post

ராம் சரணுக்கு வாழ்த்து சொன்ன அமிதாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures