தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ராகவா லோரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘புல்லட் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், நாக சைதன்யா, ஜீ வி பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவான ‘புல்லட்’ எனும் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ் , எல்வின், வைசாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் , ரங்கராஜ் பாண்டே , ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ் , சிவ ஷா ரா, கே பி வை வினோத், வி ஜெ தணிகை, சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் 90 களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்த கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். அமானுஷ்ய எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த ‘புல்லட்’ திரைப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகை டிஸ்கோ சாந்தி உடல் முழுவதும் டாட்டூ அணிந்து அமானுஷ்ய சக்திகளின் ராணியாக நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.