கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த மூன்று பேரே ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் குறிப்பிட்டுள்ளன.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இந்த
விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

