முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக முன்னெடுக்கப்படும். எந்தவொரு தரப்பினரும் ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை எதிர்கொள்வார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடுமையான சட்ட நடவடிக்கை
செப்டம்பர் மாதம் தொடங்கி, புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக ஜனாதிபதி அநுர கூறினார்.
மேலும் எந்தவொரு நபரும் தனது நிர்வாகத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, இன்று வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த வேளையில் ஜனாதிபதி இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.