Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் எனக் கூறிய இந்தியா | கோத்தபாய தெரிவிப்பு

September 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் எனக் கூறிய இந்தியா

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் என இந்தியா தன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோபூர்வ இல்லத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் உரையாடும் போது முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட தகவலை வெளியிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைதீவில் இருக்கும் போது இந்திய விடுத்த கோரிக்கை 

“ரணில் தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள இரகசியம்” | Gotabaya Reveals Secret About Ranil

“ நான் மாலைதீவில் இருந்த போது இந்தியா ரணிலை ஜனாதிபதி நியமிக்க வேண்டாம் என என்னிடம் பெரிய கோரிக்கையை விடு்த்தது. நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் இணங்கியது போல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை ஜனாதிபதியாக நியமிக்குமாறு இந்தியா என்னிடம் கோரியது.

எனினும் ரணிலை ஜனாதிபதியாக நியமிக்குமாறு எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.ரணிலை ஜனாதிபதியாக நியமிக்குமாறு எங்களவர்களே என்னிடம் வந்து கூறினர்.

எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக நான் ஜனாதிபதி பதவியை ரணிலுக்கு வழங்கினேன். இதன் காரணமாவே இந்தியா என் மீது கோபம் கொண்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலை பதில் ஜனாதிபதியாக நியமித்த 

“ரணில் தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள இரகசியம்” | Gotabaya Reveals Secret About Ranil

எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமித்து விட்டு நாட்டில் இருந்து வெளியேறினார்.

கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டதுடன் அதன் பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று  ஜனாதிபதியாக தெரிவானார்.

“ரணில் தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள இரகசியம்” | Gotabaya Reveals Secret About Ranil

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தெரிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் பாணின் விலையில் மாற்றம்

Next Post

ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கை போதாமையா? ஆபத்தா?

Next Post
ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..!

ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கை போதாமையா? ஆபத்தா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures