ரஜினியின் காலாவில் ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் 35 வயது பெண்ணாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருப்பதாக கூறியுள்ளார் ஹூமா குரேஷி.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்த் மாதிரியான முன்னணி தென்னிந்திய நடிகரின் படத்தில் நடிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை. அதுவும் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். இது நான் நினைத்தே பார்த்திராத வாய்ப்பு.
ரஜினிகாந்த், உடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளையும் அரவணைத்து செல்கிறார். அனைவரும் காட்சிகளில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாம் சிறப்பாக நடித்தால் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். காலாவில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால் அது ரஜினி கொடுத்த உற்சாகம் தான் என்கிறார் ஹூமா குரேஷி.