பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில், வேங்கமகன் ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கலே என்று ஒரு சண்டை காட்சிக்கு முன்பு பஞ்ச் டயலாக் பேசுவார் ரஜினிகாந்த். அந்த டயலாக்கைப் போன்று தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடித்துள்ள நட்பே துணை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது.
அதாவது, வேங்கமகன் ஒத்தையில நிக்க மொத்தமா வராங்களே என்று அந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலின் லிரிக் வீடியோவை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப்பாடலை சின்னப்பொண்ணு மற்றும் ஹிப்ஹாப் ஆதி இணைந்து பாடி உள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர், போர்வல் சாங் வெளியாகி ஹிட்டடித்த நிலையில், இந்த பாடலும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
மேலும், பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ள இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் பார்த்திபன், சவுசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.