Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் மேல் நீதிமன்றில் 41 பேருக்கு தூக்கு தண்டனை!

January 2, 2018
in News, Politics
0

யாழ் மேல் நீதிமன்றில் 3 இராணுவத்தினர் உட்பட 41பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 வருடங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்றபுள்ளிவிபரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரைமேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதிகே.பி.எஸ்.வரதராஜா,

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதிஎஸ்.தியாகேந்திரன்,

2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதிபி.ஸ்வர்ணராஜா,

2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதிஆர்.ரி.விக்னராஜா,

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ்.பரமராஜா,

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதிஜெ.விஸ்வானந்தன்,

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதிஅ.பிறேம்சங்கர்,

2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி திருமதிகே.சிவபாதசுந்தரம், ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாககடமையாற்றியுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரையாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருகிறார்.

மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக்காலப் பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்குமரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2005, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கும், 2012 ஆம்ஆண்டு 2 பேருக்கும், 2013 ஆம் ஆண்டு ஒருவருக்கும், 2014 ஆம் ஆண்டு 4பேருக்கும், 2015 ஆம் ஆண்டு 8 பேருக்கும், 2016 ஆம் ஆண்டு 11 பேருக்கும் 2017ஆம் ஆண்டு 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைசம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதவான்நீதிமன்றங்கள் ஊடாக வழக்கு விசாரணைகளை இடம்பெற்று பின்னர் மேல் நீதிமன்றில்குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வானில் தோன்றிய வித்தியாசமான சூரிய ஒளிவட்டம்

Next Post

ரெமோ வில்லனுக்கு மம்முட்டி படத்தில் வாய்ப்பு..!

Next Post

ரெமோ வில்லனுக்கு மம்முட்டி படத்தில் வாய்ப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures