யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின் முயற்சியால் பல வீதிகளுக்கு 150W LED விளக்குகள் மற்றும் உள்ளொழுங்கைகளுக்கு புதிய வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
யாழ்.மாநகரசபையின் 2018ஆம் ஆண்டுக்கான முத்திரைவரியில் கொள்வனவு செய்யப்பட்ட வீதி விளக்குகளைப்பொருத்தும் பணிகளை மாநகரசபை ஆரம்பித்துள்ளது.
இந்தப்பணியின் முதலாம் கட்டத்தின் கீழ் இப்புதிய வீதி விளக்குகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் மற்றும் யாழ்.மாநகரசபையின் துணை முதல்வர் து.ஈசன் ஆகியோரின் தலைமையில் நேற்று 11.03.2018 திங்கட்கிழமை யாழ்.மாநகரசபையின் மின்சாரப்பொறியியல் பிரிவினரால் பொருத்தப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில் அமைந்துள்ள ஜே/100 வண்ணார்பண்ணை வடகிழக்கு பிரிவில் கலட்டி அம்மன்கோவில், கலட்டிப்பிள்ளையார் கோவில். செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனம், நாச்சிமார் கோவில், பிறவுண் வீதி உள்ளொழுங்கைகள் என்பனவற்றுக்கும் ஜே/102 கந்தர்மடம் வடமேற்கு பிரிவில் பிறவுண் வீதி உள்ளொழுங்கைகள், ரயில் தண்டவாளம் அருகிலுள்ள வெளிநாட்டுப்பிள்ளையார் கோவில் மற்றும் பிறவுண் வீதி பத்திரகாளி கோவில் என்பனவற்றுக்குமே புதிய வீதி விளக்குகளும், 150W LEDவிளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக வீதி விளக்குகள் இன்றி சிரமப்பட்டு வந்த மக்கள் யாழ்.மாநகரசபைக்கும், யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அவர்களுக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

