யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27) புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ராசிக் மற்றும் கேணல் நிஷங்க ஆகியோரும் பங்குபற்றினார்கள்.
மேலும், அரசாங்க அதிபருடனான சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.




