இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (2) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் அரசியல் குழுவும், இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை கையாளத் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட கட்சியின் குழுவும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஞா.சிறீநேசன், க.கோடீஸ்வரன், து.ரவிகரன், இ.சிறீநாத் , ப.சத்தியலிங்கம் ஆகியோரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் கே.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
