முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.
அதன்போது, அவரிடம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
காரணம்
15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறவே அவருக்கு குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.