Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் காலமானார்

July 28, 2020
in News, Politics, World
0

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் தனது 79 ஆவது வயதில் கொழும்பில் நேற்று காலமானார்.

வீரகேசரி பத்திரிகையின் கொழும்பு நீதிமன்றச் செய்தியாளராக 1965 இல் ஊடகத்துறையில் பிரவேசித்த இவர் சுமார் 55 வருடங்கள் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். அத்துடன் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பின்னர் 1980 களில் வீரகேசரியின் யாழ்ப்பாண அலுவலக செய்தியாளராகவும் பத்திரிகைத்துறையில் தனது பணியைத் தொடர்ந்த காசி நவரட்ணம், பின்னர் கொழும்பில் வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

சூரியன் எவ்.எம். ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதலாவது செய்தி ஆசிரியராகவும் காசி நவரட்ணம் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், ஆவரங்காலை பிறப்பிடமாகக்கொண்ட இவர், தீவிரமான போர் இடம்பெற்ற காலகட்டங்களில் செய்தி சேகரிப்பில் வீரகேசரியின் யாழ். அலுவலக செய்தியாளராக செய்த பத்திரிகைப்பணி குறிப்பிடத்தக்கது.

Previous Post

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள்

Next Post

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றியவர்கள் கைது

Next Post

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றியவர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures