முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாட்களைக் கொண்ட முதலுதவி பயிற்சி கருத்தரங்கு நேற்று(30) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்தரங்கினை முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் சர்வோதய அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் இக் கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டனர்.