தமிழர் பாரம்பரிய தின்பண்டங்களில் ஒன்றான முறுக்கு செய்வதற்கு எளிதான விதத்தில் அமைந்திருக்கும். இது உளுந்து மாவு, அரிசிமாவு, கலந்து உருவாக்கப்படும் ஒரு பலகார வகைகளில் ஒன்று. அதிலும் , அச்சு முறுக்கு, கை முறுக்கு, தேன்குழல் முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு, நெய் முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, பூண்டு முறுக்கு, கார முறுக்கு என்று பல்வேறு வகைகள் இருக்கிறது .
இப்போதெல்லாம் கை முறுக்கு பிழிவது சாதாரணமாக இல்லத்தரசிகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
அதனையும் எளிமையாக்கும் விதத்தில் பொறித்துத்தள்ள வந்திருகிறது ஒரு நவீன கண்டுபிடிப்பு.