முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த தனது 77 வயதில் காலமானார்.
இவர் இலங்கை இராணுவத்தின் 14வது இராணுவத்தளபதி ஆக 1996 முதல் 1998 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார்.
கூட்டு நடவடிக்கைகளின் தளபதியாக செயற்பட்ட இவர் இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.