வைகோ பற்றி மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப் போல வாழ்ந்து பார்க்கட்டும் என்று நடிகர் சத்யராஜ் சவால் விடுத்தார்.
ஈரோட்டில் நடந்த மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் விழாவில் நடிகர் சத்தியராஜ் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
“வைகோவின் அறிவு, திறமை, ஆற்றல், தியாகத்தை சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் சமுதாயத்திற்கே இழப்பாகும். சமூக அநீதி எது என்று தெரிந்தால்தான், சமூக நீதி எது என்பது புரியும்.
‘டூப்’ போடாத போராளியாக வைகோ திகழ்கிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப்போல் வாழ்ந்து பார்க்க வேண்டும். யார் பிரதமரானாலும், முதல்வரானாலும் சமுதாயத்திற்கு நலன் பயக்கும் திட்டங்களை வைகோ அவர்களுக்கு ரகசியமாக அவர்களிடம் கொடுத்தால் நாடு நலம்பெறும்” என்று சத்யராஜ் பேசினார்.













