Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் நெருக்கடிக்குள் நாடு: எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

September 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

ஆகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் நேற்று அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை

சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு நிலக்கரி பெறுவதற்கான புதிய டெண்டருக்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும் என்றும்  தெரிவித்துள்ளார். 

2) Lanka Coal Company will publish a new International Open Competitive Tender that will allow any suitable supplier that has the ability to provide Coal on a long term credit basis. To fulfill the immediate requirements, balance 19 Cargos from last years tender will be advanced.

— Kanchana Wijesekera (@kanchana_wij) September 23, 2022

தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டெண்டரின்படி பெறப்பட வேண்டிய நிலக்கரி இருப்புக்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருட டெண்டரில் இருந்து மீதியான 19 சரக்குகள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

10 மணிநேரம் வரை மின்வெட்டு 

மீண்டும் நெருக்கடிக்குள் நாடு: எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு | Coal Tender Cancelled Update From Minister

இலங்கை நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இது நாட்டை மீண்டும் மின்சார நெருக்கடிக்குள் தள்ளக்கூடும். ஒக்டோபர் 28ஆம் திகதி வரை போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. 

அடுத்த சில நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால், இலங்கையில் தினசரி 10 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

கோதுமையின் விலை குறைகிறது!

Next Post

குருந்தூர்மலை, திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துக! | சுமந்திரன்

Next Post
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

குருந்தூர்மலை, திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துக! | சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures