தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், மீண்டும் இந்தி சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த ஆண்டு அவர், ‘பேபி ஜோன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இப்போது அவர் மீண்டும் இந்தியில் நடிக்கவுள்ளார்.
பிரபல நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் இந்தியாவின் கல்விமுறைக் குறித்த விமர்சனமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. செக்டார் 36 படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார்.