பொலன்னறுவை, வெலிகந்த, ரணவிரு கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (4) மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 முதல் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

