Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!!

March 25, 2019
in News, Politics, World
0

வரட்சியான காலநிலையுடன் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்காக இன்று முதல் நாடு முழுவதும் 4 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தினமும் காலை 3 மணிநேரமும் மாலையில் ஒருமணி நேரமும் மின்வெட்டு செயற்படுத்தப்படவுள்ளது. வரட்சியான காலநிலை மாறும் வரை இந்த திட்டம் அமுலிலிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நீரேந்து பகுதிகளில் மழை வீழ்ச்சி குறைந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சியுடன் மின்சாரத்துக்கான கேள்வியும் உயர்வடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி மின்துண்டிப்புகள் இடம்பெற்றன. இது தொடர்பில் மின்சார சபைக்கும்

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந் நிலையிலே இன்று திங்கட்கிழமை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை அல்லது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான அட்டவணையில் ஏதாவது ஒரு நேரத்தில் மின்வெட்டு மேற்கொள்ளப்பபடும். அத்தோடு மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அல்லது இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இரவில் ஒரு மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை இது வரை அனுமதி பெறவில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.முன்கூட்டி அறிவித்த பின்னரே மின்வெட்டு அமுல்படுத்த வேண்டும் எனவும் ஆனால் கடந்த சில தினங்களாக முன்அறிவிப்பின்றி மின்வெட்டு இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பணிப்பாளர் ஜெயந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் மின்சார சபை பொது முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018/2019 இல் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என 2016 இலே எச்சரித்திருந்தோம். இதற்கு தேசிய திட்டமொன்றை தயாரிக்குமாறும் மின்சாரத் திட்டங்களை முன்டெடுக்குமாறும் கோரியிருந்தோம். ஆனால் அதனை செய்ய மின்சார சபை தவறியதாகவும் அவர் கூறினார்.

2015 முதல் 2022 வரை மின்சாரத்திற்கான கேள்வி 5.5. வீதத்தினால் எதிர்பார்க்கப்பட்டது. இதனை சமாளிக்க முன்கூட்டி திட்டங்கள் வகுப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதே வேளை நீரேந்து பகுதிகளில் உள்ள 6 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 34.3 வீதமாக குறைந்துள்ளதாக அறிவிக்கப் படுகிறது. காசல்ரீ நீர் மட்டம் 9 வீதமாகவும் மவுசாகெலே 26.5 வீதமாகவும் கொத்மலை 34.2 வீதமாகவும் விக்டோரியா 36.9 வீதமாகவும் ரந்தெனிகல 88 வீதமாகவும் சமநலவெல நீர் மட்டம் 18 வீதமாகவும் குறைந்துள்ளது. இதே வேளை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.

Previous Post

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை செய்வதில் சில நெருக்கடிகள்-விஜயகலா மகேஸ்வரன்

Next Post

9 ஈரானியர்கள் தென்பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

Next Post

9 ஈரானியர்கள் தென்பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures