மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம் இம் மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு இலங்கை மின்சார சபையால் (CEB) சமர்ப்பிக்கப்பட்டது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களால் இந்த தீர்மானம் அவசியமானது எனவும், மின்சார சபை தனியார்மயப்படுத்தப்பட்ட பின் கட்டணங்கள் கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாகவும் மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.